Skip to content
  • bbbm@maco.jfn.ac.lk
  • 021 222 1106
BBM DEGREE PROGRAM
  • Home
  • About
    • Programme
    • Syllabus
      • New Syllabus
      • Old Syllabus
  • Team
  • Students
    • Academic Calendar
    • Handbook
    • Student’s Appeal
    • Downloads
  • Testimonials
  • Contact
  • Home
  • About
    • Programme
    • Syllabus
      • New Syllabus
      • Old Syllabus
  • Team
  • Students
    • Academic Calendar
    • Handbook
    • Student’s Appeal
    • Downloads
  • Testimonials
  • Contact

Bachelor of Business Management(BBM)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்புத் திட்டமிடலின் நோக்கமான சமூகத்திற்கிசைவான புதிய கற்கை நெறிகளை உருவாக்குவதன் ஒரு அம்சமாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) ஆரம்பிக்கின்றது. இக்கற்கை நெறி ஒரு வெளிவாரிக் கற்கை நெறியாகும். இது நாட்டின் எப்பகுதியிலுமிருக்கும் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தும் முகமாக திறந்த தொலை தூரக் கற்கை நெறியாக ஆரம்பிக்கப்படுகிறது. இது ஒரு இணைய வழிக் கற்கை (online programme) நெறியாகும்.

LMS

Learning Management System

Click Here

SIS

Students Information System

Click Here

CODL

Centre for Open and Distance Learning

Click Here

FMSC

Faculty of Management Studies and Commere

Click Here
  • Programme
  • Course Units
  • Entry Requirements
  • Fees Structure

Programme Structure

இந்த கற்கை நெறியானது 98 கட்டாய கிரெடிட் பெறுமானங்களை கொண்டுள்ளது. அதில் 8 கிரெடிட் பெறுமானங்கள் ஒரு பாடநெறிக்கு 2.00 கிரெடிட் பெறுமானமாக முதலாம் மற்றும் இரண்டாம் வருடங்களின் நான்கு வணிக ஆங்கில பாடநெறிகளுக்கும் ஏனைய முப்பது நெறிகளுக்கு 3.00 கிரெடிட் பெறுமானமாக 90 கிரெடிட் பெறுமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கிரெடிட் பெறுமானம் 50 அனுமானிக்கப்பட்ட மணித்தியாலங்களுக்கு சமனாகும்.

  • கற்கைநெறிக்கான காலப்பகுதி : 3 ஆண்டுகள்
  • கற்கைநெறிக்கான அரையாண்டுகளின் எண்ணிக்கை : 6 அரையாண்டுகள்
  • ஒரு அரையாண்டிற்கான காலப்பகுதி : 20 வாரங்கள் (பரீட்சைகள் உள்ளடங்கலாக)
  • கற்றல் முறை : கலந்த கற்பித்தல்முறைமை
  • பயிற்றும் மொழி : தமிழ்
  • கற்கைநெறியை முடிப்பதற்கான ஆகக்கூடிய காலப்பகுதி : 6 ஆண்டுகள்

Programme

பாட அலகுகள்

முதலாம் வருடம்
முதலாம் அரையாண்டுBBM 1113 முகாமைத்துவத் தத்துவங்கள்
BBM 1123 வணிகச் சு+ழல்
BBM 1133 அறிமுகக் கணக்கீடு
BBM 1143 தகவல் மற்றும் தொடர்பாடல்
தொழில்நுட்பத்தின் அறிமுகம்
BBM 1153 கூட்டாண்மை நிதிக்கோர் அறிமுகம்
BBM 1162 வணிக ஆங்கிலம் - 1இரண்டாம் அரையாண்டுBBM 1213 நிறுவன நடத்தை
BBM 1223 கிரய மற்றும் முகாமைக் கணக்கீடு
BBM 1233 சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
BBM 1243 வணிகத்துக்கான கணிதமும்
புள்ளிவிபரவியலும்
BBM 1253 வணிகப் பொருளியல்
BBM 1262 வணிக ஆங்கிலம் - 2

இரண்டாம் வருடம்
முதலாம் அரையாண்டு

BBM 2113 வணிகச் சட்டம்
BBM 2123 வணிகத்துக்கான கணிய அளவீட்டு முறை
BBM 2133 மனிதவள முகாமைத்துவம்
BBM 2143 உயர் முகாமைக் கணக்கீடு 3
BBM 2153 வங்கி முகாமைத்துவம்
BBM 2162 வணிக ஆங்கிலம் -3

இரண்டாம் அரையாண்டு

BBM 2213 சர்வதேச வர்த்தகம்
BBM 2223 செயற்திட்ட முகாமைத்துவம்
BBM 2233 சிறு வணிக முகாமைத்துவம்
BBM 2243 நிதிக் கணக்கீடு
BBM 2253 வாடிக்கையாளர் தொடர்பு முகாமைத்துவம்
BBM 2262 வணிக ஆங்கிலம் - 4

மூன்றாம் வருடம்
முதலாம் அரையாண்டு

BBM 3113 நிதி அறிக்கையிடல்
BBM 3123 நிதித் தந்திரோபாயம்
BBM 3133 நுகர்வோர் நடத்தை
BBM 3143 தகவல் முகாமைத்துவம்
BBM 3153 தொழில் சட்டங்களும் தொழிலாளர் உறவும்

இரண்டாம் அரையாண்டு

BBM 3213 தந்திரோபாய முகாமைத்துவம்
BBM 3223 தலைமைத்துவமும் குழு முகாமைத்துவமும்
BBM 3233 செயற்பாட்டு முகாமைத்துவம்
BBM 3243 பொது நிதியியல்
BBM 3253 கணக்காய்வும் வரியியலும்

Course Units

Entry Requirements

க.பொ.த (உ.த) பரீட்சையில் எந்தப் பிரிவிலும் சித்தி அடைந்திருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30 புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

Entry Requirements

Fees Structure

ரூபா 240,000.00
(பகுதி பகுதியாகச் செலுத்தலாம்)

Fees Structure

LATEST NEWS

மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை அனுமதி அட்டை வழங்கல்

June 26, 2023 Leave a comment

..

Read More

வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022 பிரிவு – XIII

May 9, 2023 Leave a comment

    Application..

Read More

students Testimonials

  • பா.திருக்குமார்

    எனது எதிர்பார்ப்பும் நிறைவேறலும்…..

    நான் பாலசுப்பிரமணியம் திருக்குமார், இலங்கை வங்கியில் உத்தியோகத்தராகக் கடமை புரிகின்றேன். உங்களைப் போல் ஒரு மாணவனாக இணைய வழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி தொடர்பான எனது அனுபவங்களினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

    நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்வாரியான மாணவனாக 2008ம் ஆண்டு வணிகமாணிக் கற்கை நெறியினைத் தொடர்ந்திருந்தேன். எனது முதலாவது வருடத்தினை நிறைவு செய்த வேளையில் எனக்குக் கிடைத்த வேலை வாய்ப்பினால் உள்வாரியான கற்கை நெறியினைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இலங்கை வங்கியில் இணைந்ததன் பின்னரும் எனது இளமாணிப் பட்டப்படிப்பினை எவ்வாறு பூர்த்தி செய்வது எனும் எண்ண ஓட்டம் தொடர்ந்து இருந்தது.

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறியினை முதலாம் வருட விலக்களிப்புடன் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பினை முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீட பீடாதிபதியும், வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி இணைப்பாளரும் பல்கலைக்கழக மூதவையின் அனுமதியுடன் பெற்றுத் தந்திருந்தார்கள். இத்தகைய முதலாவது அனுபவமே இக் கற்கையானது முற்றுமுழுதுமாக மாணவர் நலன் நோக்கியதானதாகவே வடிவமைக்கப்பட்டமையினை உணர்த்தியது.

    இதன்படி டீடீஆ நான்காவது அணியுடன் இணைந்தேன். உண்மையிலேயே தொழில் புரிவோருக்கும், பல்கலைக்கழக அனுமதியினைப் பெற சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதோருக்கும் வாய்த்த மிகவும் பெறுமதிவாய்ந்த ஒரு பட்டப்படிப்புக் கற்கை நெறியாகவே இதனை நான் கண்ணுற்றேன். நியாயமான கட்டணத்துடன் உயர்தரம் வாய்ந்த பட்டப்படிப்பாகக் காணப்படுவதோடு க.பொ.த உயர்தரத்தில் எந்தப் பிரிவில் கல்வி கற்றிருந்தாலும் இக் கற்கை நெறியினை தொடரக் கூடியதாகக் காணப்படுவது இதனது சிறப்பம்சமாகும்.

    மேலும் எனது தாய் மொழியில் கற்பது மிகவும் இலகுவானதாகவும் இணைய வழிமுறையில் கல்வி கற்பது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது. இணைய வழி முறையின் ஆரம்பத்தில் சில சிரமங்கள் காணப்பட்டாலும் அவற்றினை நாமே நிவர்த்தி செய்யக் கூடியவாறு அமைந்தது இக் கற்கைநெறியின் இணையவழி முறைமையினை வடிவமைத்தமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

    விரிவுரைகள் வார ரீதியாக பதிவேற்றம் செய்யப்படுவதனால் எனக்கு பொருத்தமான நேரத்தில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பும் பாடரீதியான கணிப்பீடுகளினை உரிய நேர ஆயிடைக்குள் சமர்ப்பிக்கும் போது கணிசமான அளவு புள்ளிகளினைப் பெறக் கூடியவாறும் அமைந்தது. இக் கணிப்பீட்டுப் புள்ளிகள் இறுதிப் புள்ளிகளிற்குள் உள்ளடக்கப்படுவதனால் இலகுவான முறையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய முடிந்தது.

    திறமையான விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கற்பித்தல் முறைகளும் மிகவும் விளக்கமான பாட உள்ளடக்கங்களும் எனது அறிவினை மேம்படுத்தியது. எனது அன்றாட வாழ்வின் ஓரங்கமாகவே இவ் விரிவுரைகளும் பொருந்தியிருந்தன ஏனெனில் நெகிழ்வுத்தன்மை கொண்ட விரிவுரை நேரங்களினால் பொருத்தமான நேரங்களில் கற்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.

    இடையிடையே நடாத்தப்படும் நேரடிச் சந்திப்புக்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. ஏனெனில் பதிவேற்றப்படும் பாட விடயங்களில் ஏற்படும் சந்தேகங்களினை வினைத்திறனான முறையில் தெளிவுபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இந் நேரடிச் சந்திப்புக்கள் இருந்தன. இக் கற்கை நெறியினை தெரிவு செய்துள்ளோருக்கும், கற்கையினை மேற்கொள்பவர்களுக்கும் எனது அனுபவத்திலிருந்து கூறுவது இக் கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானதும் பயனுடையதாகவும் உள்ளமையினால் இவற்றினை தவறவிடாது பங்குபற்றுவது மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும்.

    பல புதிய பாட விரிவுரைகளினையும் ஏற்கனவே அறிந்த பாடங்களில் மிக மேம்பட்ட விடயங்களினை அறிந்து கொள்ளக் கூடியவாறு இருந்ததோடு இவற்றின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவை எனது பணியிடத்திலும் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் எனது முடிவெடுக்கும் ஆற்றலினையும் சிந்தனை முறைமையினையும் மேம்படுத்த உறுதுணையாயிருக்கின்றன. சீரிய முயற்சியுடன், கல்வி கற்கும் நேரத்தினைத் திட்டமிட்டு, குழுமுறையில் கல்வி கற்கும் போது பாடவிதானங்களினை உள்வாங்கும் அளவு அதிகரித்ததனை உணரக் கூடியதாக இருந்தது.

    எனது வங்கியியல் வாழ்க்கையில் பயிற்சி ஆளணி உதவியாளராக இணைந்து கொண்டதிலிருந்து அடுத்தடுத்து பெற்றுக்கொண்ட பதவியுயர்வுகளிற்கு இவ் இளமாணிப் பட்டம் மிகவும் இன்றியமையாததாக இருந்தது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார முதுமாணி கற்கையினை தொடர்வதற்கு இணைய வழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறியே உறுதுணை புரிந்தது என்றால் அது மிகையாகாது. என்னைப் போன்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவினை நனவாக்கிய இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறியினால் நான் மிகுந்த பயனடைந்தேன் என்பதனைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.

     

    உங்களில் ஒருவன்

    பா.திருக்குமார்

  • Nancy Perez

    Testimonial

prev next

TEAM MEMBERS

Programme Coordinator



Prof.J.Robinson

Moodle Administrator



Mr.K. Siyanthan

Tutor Mentor



Ms. Dilogini Nijanthan

Tutor Mentor



Mr. B. Sayanthan

Tutor Mentor



Ms.T. Thenuja

Tutor Mentor



Ms. Nithya Kiritharan

View All Members

Address

Coordinator
BBM Online Degree Program
Faculty of Management Studies & Commerce
University of Jaffna
10th Cross Lane, Kalasalai ROad
Thirunelvely,Jaffna

Contact Us

Email         : bbm @ maco.jfn.ac.lk
Telephone: +94 21 222 1106
Telephone : +94 21 222 3612 [CODL]
Facebook  : BBMOnlineDegree

    All Rights Resaved - 2023. Bachelor of Business Management | Faculty of Management Studies and Commerce, University of jaffna - Sri Lanka