யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம்
வியாபார முகாமைத்துவ மாணிக்கற்கைநெறி (வெளிவாரி)
(Bachelor of Business Management (Online) (BBM) (External) Degree Programme
யாழ் பல்கலைக்கழகத்தின் இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறிக்கு உங்களை வரவேற்கிறோம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்புத் திட்டமிடலின் நோக்கமான சமூகத்திற்கிசைவான புதிய கற்கை நெறிகளை உருவாக்குவதன் ஒரு அம்சமாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) ஆரம்பிக்கின்றது. இக்கற்கை நெறி ஒரு வெளிவாரிக் கற்கை நெறியாகும். இது நாட்டின் எப்பகுதியிலுமிருக்கும் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தும் முகமாக திறந்த தொலை தூரக் கற்கை நெறியாக ஆரம்பிக்கப்படுகிறது. இது ஒரு இணைய வழிக் கற்கை (online programme) நெறியாகும்.
தொலைக்கல்வி மூலமான இக்கற்கை நெறி நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணையவழி மூலமான கற்றல் முறைமையை அடிப்படையாகக் கொண்டது. இணையவழி முறைமையை முக்கியமாகக் கொண்டமையால் ஒவ்வொரு பாட அலகினதும் பாடத்திட்டத்துக்குரிய சகல அலகுகளும் மாணவர்களுக்கு இணையத்தளம் ஊடாக வழங்கப்படும். மேலும் பயிற்சிப் பட்டறைகள், கட்டுரைப் பரீட்சைகள், ஒப்படைகள் போன்றவையும் இவற்றினூடாக வழங்கப் படும். இதற்குத் தேவையான அறிவித்தல்களும் இணையத்தளமூடாக வழங்கப்பட்டிருக்கும்.
இணைய வழி மூலமான கற்கை நெறியாதலால் மாணவர்கள் தாம் விரும்பிய நேரங்களிலும், ஓய்வு நேரங்களிலும் இக்கற்கை நெறியைப் பயில முடியும். அத்துடன் மாணவர்களும், விரிவுரையாளர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களும் வழங்கப்படுகின்றன. இதில் இணைந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் சுய கற்றல் அடிப்படையிலேயே கல்வியைத் தொடர்வர்.
ஒவ்வொரு மாணவரும் தமக்கு மிகப்பொருத்தமான வழிமுறையைத் தெரிவு செய்ய முடியும். முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஒவ்வொரு மாணவரும் தமது கல்வியைப் பூரணமாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை அளிக்கும். இக்கற்கை நெறியை நடாத்தும் பொறுப்பினை முகாமைத்துவக்கற்கைகள் வணிகபீடம் ஏற்றுக்கொண்டுள்ளது.நிர்வாக ரீதியான விடயங்கள் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள் அலகினால் கையாளப்படும். கல்வியைத் தொடர்வதற்கு பிரத்தியேக வகுப்புக்கள் அவசியமற்றவை.
Nearly 100,000 students qualify each year to enter the Universities in Sri Lanka. Out of this number a little over 13,000 (ie. around 13 %) gain admission to follow degree programmes. Only a small number among the left outs manage to continue studies at the tertiary level while majority of them are left with no future prospects. Even, the opportunity available to do the higher studies externally is negligible. The University of Jaffna offering to contribute to the development of higher studies in its own way has initiated steps towards the provision of opportunities for higher studies at least to a small section, in the Tamil medium.
Though the University of Jaffna has a history of experience in conducting an External degree programme in this field, for nearly fifteen years the concept of distance learning has not been tried on to date. The faculty of Management Studies and Commerce is interested to begin a distance programme in Business Studies. The traditional mode of the distance learning where printed learning materials in the form of modules are provided to the prospective learners and conducting an external examination does not seem very fitting to modern needs, trends and technical advances.