இலங்கையில் உயர் கல்வி அமைச்சின் தேசிய இணைய வழி தொலைதூரக் கல்விச் சேவையின் தொலைதூரக் கல்வி நவீனமயமாக்கல் திட்டம் (Distance Education Modernization Project (DEMP) of National Online Distance Education Service (NODES) ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 2ம் நிலைக்கல்வி நிலையை மேம்படுத்தும் முகமாக 2003இல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 2012ம் ஆண்டில் க.பொ.த. உயர்தர மாணவர்களில் ஏறத்தாழ 100,000 மாணவர்கள் கல்வியைப் பெறவேண்டும் என்னும் இலக்குடனேயே இது உருவாக்கப்பட்டது. இங்கு நவீன தொலைக்கல்வி நுட்பங்களை உபயோகித்து மாணவர்கள் பட்டப்படிப்புகள், டிப்ளோமா கற்கைநெறிகளை திறந்த பல்கலைக்கழகங்களினூடாகவும், மரபுரீதியான பல்கலைக்கழகங்களின் வெளிவாரிப்படிப்புகள் மூலமாகவும், பொதுத்துறை, தனியார்துறை பட்டப்பின்படிப்பு 2ம் நிலைக்கல்வி (Post Secondary) நிறுவனங்களின் ஊடாகவும் இவ்வசதிகளை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
இதன் பொருட்டு இலங்கையில் பல்வேறு நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கற்கைநெறித்திட்டங்களிலிருந்தும் ஒன்பது நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன. இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இதன் படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதன் முதலில் தமிழ் மொழி மூலமான இணையவழி வியாபார முகாமைத்துவ கற்கைநெறியை வழங்கி வருகின்றது.